அன்பின் நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை CTK GROUP நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியைடைகிறோம். அனைவருக்கும் மனநிம்மதி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய எல்லா வல்ல இறைவன் துணை புரியட்டும்.
கசக்கின்ற துன்பத்தை எடு
இனிக்கின்ற இன்பத்தை கொடு
அழிக்கின்ற ஆயுதங்கள் எடு
காக்கின்ற கரங்களை கொடு
கெடுக்கின்ற பழக்கங்கள் எடு
வளர்கின்ற எண்ணங்கள் கொடு
அழுகின்ற கவலைகள் எடு
சிரிக்கின்ற மலர்களை கொடு
உதிர்கின்ற நிலைகளை எடு
தளிர்கின்ற மழலைகள் கொடு
அடிக்கின்ற கைகளை எடு
அணைக்கின்ற இதயங்கள் கொடு
சுடுகின்ற தீமையை எடு
குளிர்கின்ற நன்மைகள் கொடு
உழைக்கின்ற குழந்தைகள் எடு
உணர்கின்ற பெற்றோர்கள் கொடு
நடிக்கின்ற அரசியல் எடு
துடிக்கின்ற இளைஞர்கள் கொடு
மடிகின்ற ஜாதிகள் எடு
மறக்கின்ற மனிதத்தை கொடு
இனியும் கேட்டு கொண்டெ இருப்பேன்
எனக்கு எடுத்து கொடு...
வருக புத்தாண்டே..வளம்தனைத்
தருக புத்தாண்டே..!
இளைஞர் படை கொண்டே..தமிழ்
மறவர் துணை கொண்டே.. (வருக)
வறுமை புறமோட..கல்வித்
திறமை வழிகாட்ட.. (வருக)
வயல்கள் கதிரோடி...உயர்
நதிகள் வழிந்தோடி.. (வருக)
ஊழல் வெளியேற..நேர்மைச்
சூழல் உருவாக.. (வருக).
அனைவருக்கும் இப்புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய நல்வாழ்த்துகள்!