சீமை கருவேல மரம்
கருவேல மரம் இது எப்படி வந்தது எங்கிருந்து வந்ததுன்னு சொல்லி நேரத்த வீணாக்க விரும்பல. இது நம்மளையும், நம்முடைய நாட்டின் இயற்கை வளங்களையும் அழிப்பதற்காக சதிகாரர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கருவேல மரம்.
சீமைகருவேலமரம் நம்முடைய நீர்நிலைகளிலும் , தரிசுநிலத்தில் மட்டுமே முன்பு இருந்தது ,ஆனால் தற்போது நிலமைவேறு விளைநிலங்கள், வாய்க்கால்,வரப்புகள் என எல்லா இடங்களிலும் வளர ஆரம்பித்துவிட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மட்டும்மல்லாது விவசாயநிலங்களும் பாதிப்படைந்துள்ளது.
கருவேல மரத்தினால் ஏற்படும் விளைவுகள்:
நிலத்தடி நீர்மட்டத்தை வற்றசெய்கிறது.
மண்வளம் பாதிப்படைகிறது.
பருவமழை குறைந்துள்ளது.
நிலத்தடிநீரை உப்புநீராக மாற்றுகிறது.
நீர்நிலைகளில் உள்ளநீர் விஷதன்மையாகியுள்ளது.
காற்றில் உள்ள ஈரபதத்தை உறிஞ்சுகிறது.
மனிதனுக்கு பல சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
ஆடு,மாடுகளுக்கு பற்பல நோய்களையும்,மலட்டுத்தன்மையையும் உண்டாக்குகிறது.
இது மற்ற மரங்களைபோல் இல்லாமல் தன்னுடைய வேரைகொண்டு 30 அடி நீள , அகலத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
இந்த மரம் முழுவதும் விஷதன்மை கொண்டது.இதன் விறகை எரிக்கும்போது வெளிவரும் புகையினால்
மனிதனுக்கு புற்றுநோய்,நுரையிறல் பாதிப்பை உண்டாக்குகிறது.
இதன் அருகில் எந்த ஒரு தாவரங்களையும், மரங்களையும் செழிப்பாக வளரவிடாது காரணம் இதிலிருந்து வெளிவரும் வெப்பகாற்றுதான்.
மேலும் ஓர் உதாரணம்
நமது கிராமத்தில் உள்ள நமது பிள்ளைகள்,உறவினர்கள், நண்பர்கள் படிப்புக்காகவும், பணிக்காகவும் வெளி ஊர்களுக்கும், வெளிநாட்டிற்க்கும் சென்றுவருகிறார்கள், வரும் போது அவர்கள் முகம் மற்றும் அவர்களுடைய சருமம் முன்பு நமது கிராமத்தில் இருந்ததைவிட பளபளப்பாகவும்,அவர்கள் சருமத்தில் வறச்சியின்றி இருப்பதை காணமுடியும். இதற்கு முக்கிய காரணம் நகர்புறத்தில் அதிகமான கருவேலமரம் இருப்பதில்லை. ஆகையால் நாமும் நமது கிராமபுறத்தில் உள்ள கருவேலமரத்தை அடியோடு அழிப்போம் என உறுதிமொழி எடுப்போம். நமது அடுத்த தலைமுறையினருக்கு இயற்கை வளத்தையும், மண்வளத்தையும் பாதுகாப்போம்.
கருவேல மரத்தை அழிப்போம்
மற்ற மரங்களை வளர்ப்போம்
மழை பெறுவோம்
மண்வளம் காப்போம்.
மேலும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.
அன்புடன்.