This is an example of a HTML caption with a link.

Saturday, December 23, 2017

அ/மி. மகா முத்து மாரியம்மன் ஆலய திருவிழா - சுவாமிகளின் திருவீதியுலா காணொளிப்பதிவு 2017

அரியலூர் மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அ/மி. மகா கணபதி, அ/மி. மகா பாலமுருகன், அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன், அ/மி. செங்கமல ஆண்டவர் திருக்கோயிலின் தெய்வங்கள் மற்றும் புதிய அம்மன் சிலையின் திருவீதியுலா கடந்த டிசம்பர் (08/12/2017) கார்த்திகை மாதம் 22-ஆம் நாள் வெள்ளி கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற திருவிழா காணொளிப்பதிவு (வீடியோ தொகுப்புகளின் சுட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது) நண்பர்கள், நமது கிராம CTK YouTube Channel சுட்டியிலும் கண்டு மகிழலாம். நன்றி!




Tuesday, August 8, 2017

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - செட்டித்திருக்கோணம் - நூலகத் தொடக்கவிழா - வீடியோ பதிவு

கல்விகண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் ’காமராசர்’ பிறந்த தினத்தை (15.07.2017) முன்னிட்டு எங்கள் கிராம பள்ளிக்கு நூலகம் மற்றும் கணினி வகுப்பறை தொடக்க விழா நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவை CTK YouTube Channel சுட்டியில் கண்டு மகிழலாம்.  

CTK School ICT & Library Opening Event 2017 - P1

CTK School ICT & Library Opening Event 2017 - P2



Organized by:
CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு மற்றும்
முன்னாள் மாணவர்கள்
www.chettithirukkonam.com



Saturday, July 22, 2017

மாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி!

கல்விக்கண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் ’காமராசர்’ பிறந்த தினத்தை முன்னிட்டு, எங்கள் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் நூலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவராக கலந்துகொண்டு சிறப்பித்த (அரியலூர் - உகந்த நாயகன் குடிக்காடு) நம் மண்ணின் மைந்தன் அரியலூர் மக்களின் வாழ்வியலை, நமது மாவட்ட பேச்சு வழக்குடன் தனது முதல் படைப்பான ’இண்ட முள்ளு’வில் பதிவு செய்த படைப்பாளி நண்பர் அரசன் நமது முப்பெரும் விழாவைப் பற்றி பதிவு செய்தமைக்கு CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.



Friday, July 14, 2017

நூலகத் தொடக்கவிழா - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - செட்டித்திருக்கோணம்

நாளை (சனிக்கிழமை, 15 ஜூலை 2017) அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 10 மணி அளவில்...அட்டெண்டன்ஸ் ப்ளீஸ்....
பள்ளிக்கு நூலகம் மற்றும் கணினி வகுப்பறை அமைத்து தருகிறோம்... அனைவரும் வருக...!
All are welcome!



CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம் - அரியலூர் மாவட்டம்

CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம் - அரியலூர் மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்,
CTK நண்பர்கள் குழும சமூகநல அமைப்பானது எங்களது கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும், சிங்கப்பூர் மற்றும் மற்ற அயல்நாடுகளில் பணிபுரியும் இளைஞர்களின் நிதியினையும் அடிப்படையாகக் கொண்டு கிராம நலனுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் சமூகநல அமைப்பின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றான கிராமப்புற பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம். இந்தத் திட்டத்தில் முதலாவதாக எங்கள் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் வருகின்ற ஜூலை 15-ஆம் நாள் கல்விக்கண் திறந்த ’கர்ம வீரர்’ காமராஜர் பிறந்த நாள் விழா அன்று ’நூலகம்’ மற்றும் கணினி அறை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. நண்பர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.




Thursday, May 25, 2017

இராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு

இந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.



Wednesday, April 26, 2017

இரணீஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி - செட்டித்திருக்கோணம்

அருள்மிகு அறம்வளர்த்த தையல் நாயகி சமேத இரணீஸ்வரர் மற்றும் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் - செட்டித்திருக்கோணம்

1000 வருடங்கள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலின் ஸ்தல வரலாறு மற்றும் கும்பாபிஷேகம் வருகின்ற ஹேவிளிம்பி வருடம் தை மாதம் 2018-ல் நடைபெற இருக்கிறது.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் (Grasim Cements Ltd - Aditya Birla Group)
இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் கிராமம்.




Thursday, March 30, 2017

நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி?

தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர், நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலேயே இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிலப்பதிவேடு மின்னணு இணையவழி சேவை (e-services) மூலம் தங்களது நில உரிமை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.