Wednesday, April 26, 2017

இரணீஸ்வரர் சிவன் கோவில் திருப்பணி - செட்டித்திருக்கோணம்

அருள்மிகு அறம்வளர்த்த தையல் நாயகி சமேத இரணீஸ்வரர் மற்றும் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் - செட்டித்திருக்கோணம்

1000 வருடங்கள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலின் ஸ்தல வரலாறு மற்றும் கும்பாபிஷேகம் வருகின்ற ஹேவிளிம்பி வருடம் தை மாதம் 2018-ல் நடைபெற இருக்கிறது.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் (Grasim Cements Ltd - Aditya Birla Group)
இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் கிராமம்.


சோழர்களின் காலத்தில் கி.பி. 1044-ற்க்கு முன்பு கட்டபட்டு முதலாம் இராஜராஜன், முதலாம் குலோத்துங்கன் (ம) பாளையக்காரர்கள் காலத்திலும் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோவிலின் பூஜை வழிமுறைகள் குறித்து கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.

சதுர் வேத மங்கலம் என்று பெயர்பெற்ற இத்தலத்தில் வேத பிராமணர்கள் பாடசாலை அமைத்து குருகுலம் நடத்தி வேதம் படித்து வந்ததாகவும், இவ்வூரில் இவர்களுக்கு நில காணிக்கைகள் கொடுத்துள்ளதாகவும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சென்னி வனத்து உறத்தூரை சேர்ந்த கருதிமான் வேளாள மாதனன் என்ற அரசன் கங்கை நாட்டைச் சேர்ந்த சேதனன் என்பவனை கொன்று விட்டதாகவும் இத்தோஷத்தால் கடுமையான வியாதிக்கு ஆளாகி பல ஊர்களில் உள்ள இறைவனை தரிசித்தும் பலன் தராததால் இவ்வூர்க்கு வந்து அடியார் குளத்தில் நீராடி 32 தீபங்கள் இட்டு இரணீஸ்வரரை வணங்கியதால் அவரை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் மற்றும் பீடைகள் நீங்கியதாகவும் இக்கோவிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

திருக்கோவிலின் சிறப்புகள் மற்றும் பெருமைகள்:

1) இங்குள்ள கலியுக வரதராஜ பெருமாள் ஸ்தூபி கல்-தூண் ரூபத்தில் அதன் நான்கு பக்கங்களிலும், கிழக்கு - ஆஞ்சநேயர், மேற்கு - பெருமாள் நாமம், வடக்கு - சங்கு, தெற்கு - சக்கரம் அமைப்பில் அருள்பாலிக்கின்றார். இத்தூணே பெருமாளாக வணங்கப் பெறுகின்றது.

2) அம்பாள் ஜேஸ்டா தேவி கிழக்கு பார்த்தவாறு அருள்பாலிக்கின்றாள். தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே இத்தேவியின் சிலை உள்ளது.

3) தீராத பங்காளி சொத்து தகராறுகள், குடும்ப சண்டைகள், ஜென்ம விரோத பகைகள் போன்ற பிரச்சினைகள் இத்திருக்கோவிலுக்கு வந்து வணங்க அடியோடு நீங்கும்.

4) சத்ரு சம்பந்தப்பட்ட தோஷங்களும் நீங்குமென கோவிலின் பல்வேறு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

5) இக்கோவிலின் வடமேற்கு திசையில் ஒரு பெண் துறவி ஜீவசமாதி அடைந்ததாக கேரள சோழிபிரசன்னம் கூறுகின்றது.

இத்துணை சிறப்புகளும், பெருமைகளும் வாய்ந்த இத்திருக்கோவில் சிதிலமடைந்த நிலையை மீட்டு புதுப்பித்தல் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் திருக்கோவிலின் கீழ்காணும் பணிகள் நிதி பற்றாக்குறையின் காரணமாக நிறைவு பெறாத நிலையில் உள்ளதால் ஆன்மீக அன்பர்கள், பக்தர்கள், சிவன் அடியார்கள், தன்னார்வ பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் பொருளதவி வழங்கி இந்த இறைபணியில் கலந்து கொண்டு சிவாலய திருக்கோவிலின் திருப்பணிகள் சிறப்பாக நடபெறுவதற்கு உதவி செய்து இரணீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாளின் அனுகிரகத்தை பெற்று சீரும் சிறப்புடன் நலமுடன் வாழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கோவிலின் காம்பவுண்ட் சுவர் நான்கு பக்கங்கள் (சிமெண்ட், ஸ்டீல், கற்கள்) (Rs. 7,000/ per meter) - 8 லட்சம்

2. சிவன், அம்பாள், விநாயகர், முருகர் மற்றும் ஜேஸ்டா தேவி சன்னதி கதவுகள் - 3 லட்சம்

3. கொடிமரம் - 25,000/-

4. மடப்பள்ளி திருப்பணி - 1.25 லட்சம்

5. நவகிரக மண்டபம் - 1.50 லட்சம்

6. கோவிலின் கருவறைகளில் கல்பதித்தல் - 3 லட்சம்

7. கோவிலின் மேற்கூரை ஓடு பதித்தல் - 2 லட்சம்

8. குடிநீர் வசதி - 1 லட்சம்


CTK SIVAN TEMPLE ACCOUNT DETAILS:

ERANEESVARAR SIVAN TEMPLE
STATE BANK OF INDIA
ACCOUNT NO: 34745143462
BRANCH: REDDIPALAYAM
IFSC: SBIN0012792
ARIYALUR (DT)

(Temple welcomes donors/ volunteers to be part of the CTK Sivan Temple Community)


இப்படிக்கு,
கோவில் கிராம திருப்பணிக்குழு
CTK நண்பர்கள் குழுமம்
செட்டித்திருக்கோணம்
visit: www.chettithirukkonam.com
write to: chettithirukkonam@gmail.com


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment