Friday, July 14, 2017

CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம் - அரியலூர் மாவட்டம்

CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம் - அரியலூர் மாவட்டம்

அனைவருக்கும் வணக்கம்,
CTK நண்பர்கள் குழும சமூகநல அமைப்பானது எங்களது கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும், சிங்கப்பூர் மற்றும் மற்ற அயல்நாடுகளில் பணிபுரியும் இளைஞர்களின் நிதியினையும் அடிப்படையாகக் கொண்டு கிராம நலனுக்காக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எங்கள் சமூகநல அமைப்பின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றான கிராமப்புற பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம். இந்தத் திட்டத்தில் முதலாவதாக எங்கள் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் வருகின்ற ஜூலை 15-ஆம் நாள் கல்விக்கண் திறந்த ’கர்ம வீரர்’ காமராஜர் பிறந்த நாள் விழா அன்று ’நூலகம்’ மற்றும் கணினி அறை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. நண்பர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


 ”கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.” (குறள் 400)

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
செட்டித்திருக்கோணம்
அரியலூர் மாவட்டம்

CTK நண்பர்கள் சமூகநல அமைப்பின் முப்பெரும் விழா:

> கல்விக்கண் திறந்த ’கர்ம வீரர்’ திரு. ’காமராஜர்’ நூலகம் மற்று கணினி அறை திறப்பு விழா

> பள்ளி கல்வி மேம்பாடு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

> தமிழக அரசின் ’நல்லாசிரியர்’ விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாரட்டு விழா

நாள்: 15/07/2017 சனிக்கிழமை, காலை 10:00 மணி
இடம்: பள்ளி வளாகம், செட்டித்திருக்கோணம்

முப்பெரும் விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கும்....

CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு மற்றும் முன்னாள் மாணவர்கள்
செட்டித்திருக்கோணம்


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


1 Responses So Far:

Unknown said...


magnificent points altogether, you just received a new reader. What might you suggest about your post that you simply made some days ago? Any positive? yahoo login mail

Post a Comment