Saturday, August 22, 2015

அரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்!

அரியலூர் மாவட்டம்.
    அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளே. சிமெண்ட் தொழிற்சாலைகளின் ஆதிக்கத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. நமது மாவட்டத்தில் தான் ஆசியாவிலேயே சிமென்ட் தயாரிப்பதற்கான அதிகமான மூலக்கூறு படிமம் உள்ளது  அதனால் இங்கு  அதிகபடியான சிமெண்ட் ஆலைகள் உள்ளது அதனால் நாம் பெற்ற பயன் என்ன  சிமெண்ட் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படுகிறதா?

இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள்:

1) அரசு சிமெண்ட்
2) பிர்லா  சிமெண்ட்
3) ராம்கோ சிமெண்ட்
4) செட்டிநாடு சிமெண்ட்
5) டால்மியா சிமெண்ட்

இதற்கு முன்பு இங்கு இத்தனை சிமெண்ட் தொழிற்சாலைகள் இல்லை அதனால் போதுமான மழை பொய்தது ஆனால் தற்போது மற்ற மாவட்டத்தை விட மழையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குவது சிமெண்ட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியெரும் நச்சு புகைமூட்டமே காரணம்.

அரியலூரின் தெற்கு பகுதியில் தான் சிமெண்ட் தயாரிப்புக்கு தேவையான மூலக்கூறுகளான சுண்ணாம்புக்கல், கருமண், தாது பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களை சிமெண்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கிவிட்டார்கள்.

இதனால் இப்பகுதியில் விவசாய தொழிலும் நலிவுற்றது. மிஞ்சியுள்ள விளைநிலங்களுக்கும் போதுமான மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய இயலவில்லை. இதனால் மக்கள் பிழைப்பு தேடி வெளிநாட்டிற்க்கும் , வெளிமாநிலத்திற்கும், வெளிமாவட்டத்திற்க்கும் பிழைப்பு தேடி சென்ற வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்களும் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும் இல்லை . தங்கள் தொழிற்சாலைக்கு தேவையான ஆட்களை வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வருகிறார்கள். நம் பகுதியில் உள்ள இயற்கை தாது வளங்களை சிமெண்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அழித்து வருகிறது.

பாதிப்புகள்:

சிமெண்ட்  தொழிற்சாலையிருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுகிறது, நீர்நிலைகளில் உள்ள நீர் மாசு அடைகிறது, விவசாய நிலங்களில் பயிர்களையும் பாதிக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாசநோய், தோல் நோய் போன்ற அறிகுறிகள் தற்போது தென்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தற்போது இப்பகுதியில் தோண்டப்படும் பெரிய பெரிய குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்றுவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் நம் பகுதியில் குடிநீர் பஞ்சமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுற்று சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. சிமெண்ட் ஆலைகள் இயக்கும் கனரக வாகனத்தில் அளவுக்கு அதிகமான எடைகளை ஏற்றி செல்வதால் இங்குள்ள சாலைகள் பாழைடைந்து விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.   

இதற்கு தீர்வுதான் என்ன? மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய போகிறது.

நம் பகுதி வளங்கள்  சுரண்டப்படுகிறது நம் எதிர்காலம் என்ன ஆவது? இன்னும் 50 வருடத்தில் இந்த வளங்கள் முடிந்ததும் ஆலைகள் வேறு இடம் நோக்கி போய்விடுவார்கள் பிறகு நம் பகுதி நரகம் போல் ஆகிவிடும் ஆலை நிர்வாகங்கள்  நமக்கு செய்த  நன்மை என்ன? அரசு செய்த நன்மை என்ன ? இதற்கு முடிவுதான் என்ன ? ஒரு வருடத்திலஆயிரக்கணக்கான கோடி  ரூபாய் மத்திய  மாநில அரசுகள் வரி வருவாய் பெருகின்றது. நமது மாவட்டத்திற்கும், நம் பகுதி மக்களுக்கும் செய்தது என்ன? 

நம் உரிமையை நிலைநாட்டுவது எப்படி? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை மட்டுமே இருந்தது ஆனால் இன்று நிலமையோ வேறு ஒரு ஏக்கர் 12 முதல் 15 வரை உள்ளது. விவசாய நிலத்தை விற்றுவிட்டு வீடு கட்ட, கடனை அடைக்க முடியும் ஆனால் சாப்பாட்டுக்கு மாற்றாக என்ன செய்ய முடியும் ? இதற்கு முன்பு விற்றவர்கள்  என்ன செய்கிறார்கள் உங்களுக்கெ தெரியும்

நம் பகுதி மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம். முடிந்தளவு நம் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இனி எஞ்ஞியுள்ள விளைநிலங்களையாவது  தொழிற்சாலைகளுக்கு தாரைவார்க்காமல் இருப்போம். 

”மரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்...மண் வளம் காப்போம்”

மேலும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

அன்புடன்.


CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்

(CTK Village of Social Work)

செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு

செட்டித்திருக்கோணம்



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


5 Responses So Far:

தமிழ்தாசன் said...


வாய்ப்பிருந்தால் என்னை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். அரியலூர் பகுதியில் சுமார் 2500 மரங்கள் வெட்டப் போகிறார்கள். அதை தடுக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. கூப்பிடுங்கள் 8608266088 / 9543663443

தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் இயக்கம்

தமிழ்தாசன் said...


வாய்ப்பிருந்தால் என்னை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள். அரியலூர் பகுதியில் சுமார் 2500 மரங்கள் வெட்டப் போகிறார்கள். அதை தடுக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது. கூப்பிடுங்கள் 8608266088 / 9543663443

தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் இயக்கம்

Unknown said...

எங்கள் பகுதியில் இந்த சுண்ணாம்பு தொழிற்சாலைகள் அமைய போகிறது.இதை பற்றி அறிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியாக இருந்தது நன்றி உறவே

Unknown said...

எங்கள் பகுதியில் இந்த சுண்ணாம்பு தொழிற்சாலைகள் அமைய போகிறது.இதை பற்றி அறிந்து கொள்ள உங்கள் பதிவு உதவியாக இருந்தது நன்றி உறவே

Unknown said...

Vanakkam Thozlar

Post a Comment