நமது கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (20/3/15) நடைபெற இருக்கும் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு, CTK Group - நண்பர்கள் குழுமம் மற்றும் சிங்கை வாழ் நண்பர்கள் எங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி பள்ளி மற்றும் மாணவர்கள் கல்வி மேம்பாட்டில் பங்கெடுத்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிதியுதவி வழங்கி சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சிங்கை வாழ் நண்பர்கள் மற்றும் CTK Group- நண்பர்கள் குழுமத்தின் அன்பின் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துகொண்டு பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பினை எங்கள் கிராம இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை' (குறள்-400)
(ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.)
‘Education is the most powerful weapon which you can use to change the world’
- (Nelson Mandela)
செட்டித்திருக்கோணம் பள்ளி ஆண்டு விழா காணொளி பாகம் - 1
|
0 Responses So Far:
Post a Comment