This is an example of a HTML caption with a link.

Wednesday, December 31, 2014

CTK Group - Happy New Year 2015!

அன்பின் நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை CTK GROUP நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியைடைகிறோம். அனைவருக்கும் மனநிம்மதி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வெற்றிகரமான ஆண்டாக அமைய எல்லா வல்ல இறைவன் துணை புரியட்டும். 
 

வருக புத்தாண்டே.........!

கசக்கின்ற துன்பத்தை எடு
இனிக்கின்ற இன்பத்தை கொடு

அழிக்கின்ற ஆயுதங்கள் எடு
காக்கின்ற கரங்களை கொடு

கெடுக்கின்ற பழக்கங்கள் எடு
வளர்கின்ற எண்ணங்கள் கொடு

அழுகின்ற கவலைகள் எடு
சிரிக்கின்ற மலர்களை கொடு

உதிர்கின்ற நிலைகளை எடு
தளிர்கின்ற மழலைகள் கொடு

அடிக்கின்ற கைகளை எடு
அணைக்கின்ற இதயங்கள் கொடு

சுடுகின்ற தீமையை எடு
குளிர்கின்ற நன்மைகள் கொடு

உழைக்கின்ற குழந்தைகள் எடு
உணர்கின்ற பெற்றோர்கள் கொடு

நடிக்கின்ற அரசியல் எடு
துடிக்கின்ற இளைஞர்கள் கொடு

மடிகின்ற ஜாதிகள் எடு
மறக்கின்ற மனிதத்தை கொடு

இனியும் கேட்டு கொண்டெ இருப்பேன்
எனக்கு எடுத்து கொடு...


வருக புத்தாண்டே..வளம்தனைத்
தருக புத்தாண்டே..!

இளைஞர் படை கொண்டே..தமிழ்
மறவர் துணை கொண்டே.. (வருக)

வறுமை புறமோட..கல்வித்
திறமை வழிகாட்ட.. (வருக)

வயல்கள் கதிரோடி...உயர்
நதிகள் வழிந்தோடி.. (வருக)

ஊழல் வெளியேற..நேர்மைச்
சூழல் உருவாக.. (வருக).




அனைவருக்கும் இப்புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமைய நல்வாழ்த்துகள்!

HAPPY NEW YEAR 2015

நல்வாழ்த்துகளுடன்.....! 
CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு
செட்டித்திருக்கோணம்.



Tuesday, December 23, 2014

செட்டித்திருக்கொணம் - இரணேஸ்வரர் திருக்கோவில் சிவாலயம் புதுப்பித்தல் திருப்பணி!

CTK நண்பர்கள்/ உறவுகள் கவனத்திற்கு, நமது கிராமத்தின் சுமார் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த இரணேஸ்வரர் திருக்கோவில் சிவாலயம் CTK குழும நண்பர்களால் கலந்து ஆலோசிக்கப்பட்டு மறு சீரமைப்பு செய்து புதுப்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. நமது கிராமபுற இளைஞர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் CTK சிங்கை வாழ் நண்பர்கள், CTK அரபுநாடு வாழ் நண்பர்கள், CTK வெளிநாட்டு வாழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்ற உதவியையும், ஒத்துழைப்பையும் தந்து, நமது கிராம வளர்ச்சி மேம்பாட்டில் பங்கெடுத்து செட்டித்திருக்கொணம் கிராமம் மென்மேலும் வளர்ச்சியடைய ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி!

நமது கிராமத்தில் அமைந்துள்ள இரணேஸ்வரர் திருக்கோவிலின் புகைப்படங்கள்:





Wednesday, December 10, 2014

சிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்!

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?



Saturday, November 22, 2014

செட்டித்திருக்கோணம் - பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014

எங்கள் கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17/04/2014 வியாழக்கிழமை அன்று நடந்த பள்ளி ஆண்டு விழாவின் காணொளியை எங்கள் கிராம இணையதளத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆண்டு விழாவை சிறப்புற செய்த பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் ஆண்டு விழாவிற்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்த சிங்கை குரூப் நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.



Friday, November 21, 2014

CTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்

மதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா என்ற அமைப்பில் உள்ளது.



Tuesday, October 21, 2014

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் CTK GROUP நண்பர்களின் இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துகள்!










வாழ்த்துகளுடன்....
CTK GROUP ORGANIZATION 
 




Friday, August 15, 2014

தாய் மண்ணே வணக்கம் - அனைவருக்கும் 68-ஆவது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

தாய் மண்ணே வணக்கம்...அனைவருக்கும் 68-ஆவது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!







வாழ்த்துகளுடன்...




Thursday, July 17, 2014

அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா - சுவாமிகளின் திருவீதியுலா வீடியோ தொகுப்புகள் 2014

கடந்த மாதம் ஜூன் 02/06/2014 வைகாசி மாதம் 19-ஆம் நாள் திங்கள் கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா வீடியோ தொகுப்புகள்.



CTK அ/மி மகா திரெபதையம்மன் தீமிதி திருவிழா புகைப்படத்தொகுப்பு 2014

கடந்த மாதம் ஜூன் 02/06/2014 வைகாசி மாதம் 19-ஆம் நாள் திங்கள் கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா புகைப்படத்தொகுப்புகள். 

மாரியம்மன் திருக்கோவில் முன்பு கூடியிருக்கும் பக்தகோடிகள்.





அரியலூர் மாவட்டத்தின் வரலாறு

அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.



Monday, June 2, 2014

அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா - 02/06/2014

ஜூன் 2-ஆம் நாள் (02/06/2014) சித்திரை மாதம் 29-ஆம் நாள் திங்கள் கிழமை இன்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் எங்களது கிராமத்தில் எழுந்தருளியுள்ள அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற இருப்பதால் பொது மக்கள், நண்பர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவினை சிறப்பித்து அம்மன் அருள் பெற அனைவரையும் பக்தி கலந்த அன்புடன் அழைக்கின்றோம்.   

எங்கள் கிராமத்தின் அ/மி மாரியம்மன் கோவில் 



தீமிதி திருவிழா அழைப்பிதழ்...!


அம்மன் அருள் பெற பக்தகோடிகளை வருக! வருக! என வரவேற்கும் CTK GROUP நண்பர்கள்....

அம்மன் அருள் பெற பக்தகோடிகளை வருக வருக என வரவேற்கும் சிங்கை குரூப் நண்பர்கள்.....


 அழைப்பின் மகிழ்வில்....
CTK GROUP FRIENDS ORGANIZATION
CHETTITHIRUKKONAM
chettithirukkonam@gmail.com 



Friday, May 23, 2014

கிராமத்தின் முன்னோட்டம்





Saturday, May 10, 2014

அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா 2014

அனைவருக்கும் இனிய வணக்கம், 

ஜூன் 2-ஆம் நாள் (02/06/2014) சித்திரை மாதம் 29-ஆம் நாள் திங்கள் மாலை சுமார் 4 மணிக்கு மேல் எங்களது கிராமத்தில் எழுந்தருளியுள்ள அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற இருப்பதால் பொது மக்கள், நண்பர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் கலந்துகொண்டு திருவிழாவினை சிறப்பித்து இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  



அரியலூர் ரயில் விபத்து 1956: கால வெள்ளத்தில் ஒரு பயணம்!


அநேக இரவுகளில் அந்த விபத்து எனக்குக் கனவாக வந்து பேயாட்டம் ஆடி நிம்மதியைக் குலைத்தது உண்டு. ஆண்டுகள் ஐம்பதுக்கும் மேல் கடந்தாலும் நினைவைவிட்டு அகலாத பயங்கரம். இந்தியாவில் நிகழ்ந்த கோரமான ரயில் விபத்துகளில்காலத்தால் முந்தைய அரியலூர் ரயில் விபத்தைத்தான் குறிப்பிடுகிறேன். இப்போது அதை எழுதுவதன் மூலம் என்னவாகும்என் நெஞ்சின் பாரம் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
இந்தியாவையே உலுக்கிய அந்த விபத்து 1956 நவம்பர் 23-ல் நடந்தது. 142 பயணிகள் இறந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களில் நானும் ஒருத்தி.

மான் வண்டி ரயில்
அப்போது எனக்கு வயது 21. சென்னையில் தூத்துக்குடி விரைவு ரயிலில் என்னுடைய அத்தையுடன் ஏறியிருந்தேன். இரவு 9.50மணிக்கு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டது. மூர்மார்க்கெட்டில் வாங்கிய கிறிஸ்துமஸ் பரிசுப்பொருள்கள்ஆடைகள்தின்பண்டங்கள் ஆகியவற்றுடன் நாங்கள் அந்த ரயிலில் ஏறியிருந்தோம். அந்த நீராவி ரயிலையே சான்டா கிளாஸின் மான் வண்டியாகக் கற்பனை செய்து மகிழ்ந்திருந்தேன்.

அந்த ரயிலில் மொத்தம் 13 பெட்டிகள். விருத்தாசலம் சந்திப்பு வந்தவுடன் கடைசி பெட்டியைக் கழற்றிவிடுவார்கள். அது சேலம் மார்க்கத்தில் செல்லும் ரயிலுடன் சேர்க்கப்படும். எஞ்சிய 12பெட்டிகளுடன் ரயில் பயணத்தைத் தொடரும். நாங்கள் எட்டாவது பெட்டியில் இருந்தோம். எங்கள் வரிசையில் எங்களைத் தவிர வேறு யாருமில்லை. லேசான இரவு ஆகாரத்துக்குப் பிறகு நாங்கள் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தோம். திடீரென்று ரயில் பெருத்த ஓசையுடன் குலுங்கி நின்றது. அது சாதாரணமான குலுக்கல் அல்லஅண்ட சராசரங்களும் வெடித்துச் சிதறியதைப்போன்ற குலைநடுங்க வைக்கும் குலுக்கல். என்ன நடந்தது என்றே புரியவில்லை. நீராவி என்ஜின் ஓலமிடும் ஓசை லேசாகக் கேட்டது. "ஐயோ காப்பாத்துங்க"என்ற மரண ஓலம் காதுகளைத் துளைத்தன. "…" "…" என்று ஒரே அலறல். அந்தக் கூச்சல்கள் எங்களுக்குள் பீதியை ஏற்படுத்தின. பெஞ்சிலிருந்து தரையில் விழுந்த நாங்கள் சுதாரித்துக்கொண்டு எழுந்தோம்ரயில் பெட்டிக்கு வெளியே குதித்துவிட நான் வேகமாக முற்பட்டபோதுதான் என் அத்தை வெளியே பார்த்துவிட்டு கத்தினார்: "ஜாய்ஸ்குதிக்காதேநாம் ஆற்றின் மீது இப்போது இருக்கிறோம்…"

மருதையாற்றின் சீற்றம்
அரியலூர் – கல்லாகம். இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையில் மருதையாறு ஓடுகிறது. அன்றைக்குச் சரியான மழை. மருதையாறு இரு கரைகளையும் அடைத்துக்கொண்டு ஓடியிருந்திருக்கிறது. இரவு நேரம் கூடக்கூட வெள்ளப்பெருக்கு அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து ரயில் பாலத்தைத் தொட்டுக்கொண்டும் ரயில் பாதையை அரித்துக்கொண்டும் ஓடியிருக்கிறது. ரயில் பாலத்தை ஒட்டியிருந்த கரை சுமார் 20 அடி நீளத்துக்கு வெள்ளத்தால் அரிக்கப்பட்டிருக்கிறது. பாலம் பலகீனமாக அதன் மோசமான முடிவுக்குக் காத்திருந்த நிலையில்தான்எங்கள் ரயில் அதை நெருங்கியிருக்கிறது. இருள் கவிந்த இரவில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் பாலத்துக்கு ஏற்பட்ட சேதம் ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரியவில்லை.

அரியலூர் நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மைல்கள் தாண்டிய ரயில்மருதையாற்றுப் பாலத்தின் மீது பாதையைவிட்டு இறங்கி தடம் புரண்டது. ரயிலின் நீராவி என்ஜினும்ஏழு ரயில் பெட்டிகளும் அப்படியே ஆற்றுக்குள் சரிந்தனஒரு பார்சல் வேனும் இதில் அடக்கம். எட்டாவது பெட்டி பாதையைவிட்டு முறுக்கிக்கொண்டு தடம் புரண்டிருந்தது. கடைசி நான்கு பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தின் மீது நின்றன

உயிர்ப் போராட்டம்
கூற்றுவனின் பாசக்கயிற்றில் சிக்கிக்கொண்ட பொம்மையைப் போல,நான் அந்த ரயில் பெட்டிக்குள்ளேயே அச்சத்திலும் பீதியிலும் உறைந்திருக்கிறேன். கைக்கடிகாரம் அப்போது அதிகாலை மணி 5.30என்று காட்டுகிறது. ரயில் பெட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால்ஆக்ரோஷமான மருதையாறு நொப்பும் நுரையுமாக ஆவேசத்துடன் பாய்ந்துகொண்டிருந்தது. மரங்கள்செடிகொடிகள்,ரயிலில் வந்தவர்களின் மூட்டைகள்ரயில் பெட்டியில் ஏற்றியிருந்த கட்டுகள்ஆண்கள்பெண்கள்குழந்தைகள் என உயிரற்ற சடலங்கள் ஆற்றுநீரில் விழுந்தும் மூழ்கியும் மேலே கிளம்பியும் அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்பட்டும் அச்சமூட்டுகின்றன.

மனதுக்குள் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ரயில் பெட்டிக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தபோது ரயிலின் கார்டுஅந்தப் பாலத்தின் ஓரத்திலிருந்த ஒரு கல் மீது நின்றபடி எங்களைப் பார்த்து ஏதோ கத்தினார். "வெளியே வாருங்கள்உங்கள் பெட்டி தடம் புரண்டிருக்கிறது…"
உடனே என்னுடைய அத்தை என்னைப் பார்த்து, "என் பின்னாலேயே வாஎன்று உரக்கக் கத்திவிட்டு அந்த ரயில் பெட்டியைவிட்டு வெளியேறத் தயாரானார். அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்த நான் "என்னால் முடியாதுஎன்று அழுதுகொண்டே அவரைக் கட்டிக்கொண்டேன். என் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அத்தை மிகவும் சிரமப்பட்டு ரயில் பெட்டியின் கைப்பிடியைத் திருகி கதவைத் திறந்தார்.

ஓர் அடி நூறு மைல்
பிறகு ஆற்றின் மீது தொங்கியபடி நின்ற அந்தப் பெட்டியின் படிகளில் வெகு கவனமாகக் கால்களை வைத்து மெதுவாகக் கீழே இறங்கினார். பிறகு அடுத்த பெட்டியின் ஜன்னல்அதற்கடுத்த ஜன்னல் என்று ஒவ்வொன்றாகத் தொற்றித்தொற்றிதாவித்தாவி அந்த ரயிலின் கடைசிப் பகுதி நோக்கி முன்னேறினார். அவரைப் போலவே நானும் ஜன்னல்களைப் பற்றி தாவித்தாவி அவரைப் பின்தொடர்ந்தேன். ஜன்னல் ஜன்னலாகத் தாவியபோது இதயம் படபடவென அடித்துக்கொண்டதுபற்கள் கடகடவென தந்தியடித்தன. எங்காவது ஓரிடத்தில் கைப்பிடியை நழுவவிட்டாலும் ஆற்றில் விழ வேண்டியதுதான் என்பதால் மனதில் பீதியும் அச்சமும் நிரம்பியிருந்தது. எடுத்துவைத்த ஒவ்வொரு அடியும் நூறு மைல் பயணமாக உணர்த்தின. அச்சத்திலும் பீதியிலும் வேகவேகமாக பெட்டிக்குப் பெட்டி தாவியதாலும் பழக்கம் இல்லாததாலும் பெட்டியின் கம்பிகள் அறுத்து கைகளில் தோல் உரிந்து காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது. கால்முட்டிகளும் ரணமாகி வீங்கத் தொடங்கின.

சாவை உணர்தல்
டென்னிஸனின் 'தி சார்ஜ் ஆஃப் த லைட் பிரிகேட்கவிதையில் உள்ள "சாவின் பள்ளத்தாக்கில் நான் நடந்தேன்என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. எங்களிருவரைப் போலவே வேறு சில பயணிகளும் ஜன்னல் ஜன்னலாகத் தாவி ரயில் பெட்டியின் கடைசிப் பகுதிக்கு வந்தார்கள். ஒருவழியாக மண்ணைத் தொட்டபோது அழுகை நெஞ்சை அடைத்தது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. ரயில் பாதையின் இருபுறங்களிலும் சீறிவரும் வெள்ளத்துக்கு இடையேமீட்டுச் செல்ல வருவோருக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம்.

ஆற்றில் அந்த வெள்ளத்தின் சீற்றம் படிப்படியாகத் தணிய சுமார் நான்கு மணி நேரம் ஆனது. வெள்ளம் அடங்கி ஆற்றின் இரு கரைகளுக்குள் ஒடுங்கி ஆறு பழையபடி ஓடத் தொடங்கியபோது ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சொருகியிருந்த சடலங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்தன. நீர்மட்டத்துக்கு மேலே வருவதும் பிறகு நீரில் மூழ்குவதும்நீரில் அப்படியும் இப்படியும் அலைக்கழிக்கப்படுவதுமாக இருந்தன. மீட்பு ரயில் எங்களை அழைத்துச் செல்ல வந்தது. உயிர் பிழைத்தவர்களின் ஆயாசப் பெருமூச்சும் விசும்பல்களும்உற்றார் – உறவினரை இழந்தவர்களின் சோகக் குரல்களும் சூழ அந்த ரயில் நகர ஆரம்பித்தது.

யார் இந்த ஜாய்ஸ்?
அரியலூர் விபத்து நடந்த காலகட்டத்தில் பொன்மலை ரயில்வே பள்ளிக்கூடத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்தவர் ஜாய்ஸ் தெற்கு ரயில்வேயில் கார்டாகப் பணிபுரிந்த கிளாரன்ஸ் வர்ணம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர்பிறகு மதுரையில் குடியேறினார். இரு குழந்தைகள். 1982-ல் விருப்ப ஓய்வுபெற்றவர் கணவர் கிளாரன்ஸ் வர்ணத்தின் மரணத்துக்குப் பிறகு, 1996-ல் ஜாய்ஸ் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். மெல்போர்னில் தன் பிள்ளைகளுடன் வசிக்கிறார். அரியலூர் விபத்து ஜாய்ஸை ரொம்பவே படுத்தியது. விபத்துக்குப் பிறகு ரயில் என்றாலே அலற ஆரம்பித்தார். தூக்கத்தில் அடிக்கடி விபத்தைக் கண்டு நடுக்கத்துக்குள்ளானவர் தூக்கத்தில் நடக்கும் பாதிப்புக்கும் ஆளானார். காலம் செல்ல செல்ல ரயில் பயம் குறைந்து அரியலூரை ரயிலில் கடக்கும் அளவுக்கு தன் மனதை பலப்படுத்திக்கொண்டாலும் இந்த எண்பது வயதிலும் ரயிலைப் பார்க்கும்போது அவர் கண்கள் நனைகின்றன.

Info Credit - Thanks to: http://tamil.thehindu.com/opinion/reporter-page



Monday, January 13, 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகி, ஆரோக்கியமும் செல்வமும் பொங்கி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!



Saturday, January 11, 2014

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.





உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது!

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.




பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.   

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.