Saturday, January 11, 2014

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது!

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா  அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.


பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் செயல்படுகிறது என்பதையும் அந்த மருத்துவமனைகளில் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கிறது என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய விபரங்கள் பாமர மக்களிடம் சரிவர சென்றடைய வில்லை. அதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்போம் .....

மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கிழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...

அதில் வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இடத்தில் உங்களது மாவட்டத்தின் பெயர்களை கொடுத்தால் உங்களது மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் பெயர்களை காட்டும்..

பின்பு நான் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது போல் அந்த இடத்தில் கிளிக் செய்தால் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் அந்த மருத்துவமனையின் முகவரியும், அந்த மருத்துவ மனையில் குணபடுத்தபடும் நோய்கள பற்றியும் இருக்கும்.அதேபோல் ஒவ்வொரு மருத்துவமனையும் மேலே கிளிக் செய்தால் அதே போல் தோன்றும்.. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டகளிலும் உள்ள மக்கள் இதனை தெரிந்து கொண்டு பயனடையலாம்.

நன்றி - 'உழவன்' ராசா (http://www.uzhavan.com/)



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment