This is an example of a HTML caption with a link.

Friday, August 12, 2016

செட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு!

அரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016 ஆண்டின் கானோளி (Video) பதிவு.



Tuesday, July 26, 2016

திரு. APJ. அப்துல் கலாம் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (15.10.1931 - 27.07.2015)

’எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்’ - குறள்

நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை
நீ எண்ணுவது 
விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு! 
’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’
                                                             - டாக்டர். APJ. அப்துல் கலாம்



Friday, July 15, 2016

அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2016 - வாசிப்பை நேசிப்போம்!

வாசிப்பை நேசிப்போம் - அரியலூர்ப் புத்தகத் திருவிழா ஜூலை 15ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது! இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல் அரியலூர்.




Tuesday, June 28, 2016

அழிக்கப்படுகிறதா அரியலூர் மாவட்டம் ? - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்

இன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேரில் முடியாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. மக்களில் பலர் நோய்நொடிகளின் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இறந்துவருகின்றனர். இந்த அவல நிலைக்கு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும்தான் காரணம் என்று அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது 'உண்மை கண்டறியும் குழு'.





Thursday, June 2, 2016

Ariyalur DT, CTK - Kabaddi Match Event - 03/06/2016

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு தொடர் மாபெரும் கபாடி திருவிழா - 2016

வருகின்ற 03/06/2016 வெள்ளி கிழமை இரவு 09:00 மணி அளவில் அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் அரியலூர் மாவட்ட அனைத்து கிராமம் தழுவிய கபாடி (போட்டி) திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.





Tuesday, May 31, 2016

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016

அரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016

வருகின்ற 03/06/2016 வெள்ளி கிழமை இரவு 09:00 மணி அளவில் அரியலூர் மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் அரியலூர் மாவட்ட அனைத்து கிராமம் தழுவிய கபாடி (போட்டி) திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.





Friday, May 20, 2016

அரியலூர் - செட்டித்திருக்கோணம் கிராம செயலி வெளியீடு | Chettithirukkonam Village Android App Launched By CTK Group | 20 May 2016

ஆண்ட்ராய்ட் (Android) திறன்பேசிகளுக்கான (Smart Phone) செட்டித்திருக்கோணம் கிராமத்தின் அதிகாரப்பூர்வ (Official) செயலி (Mobile App) வெளியீடு.

அனைவருக்கும் வணக்கம், நமது கிராமத்திற்கான (செட்டித்திருக்கோணம்) புதிய ஆண்ட்ராய்ட் செயலி CTK-குழும நண்பர்களால் இன்று (20.05.2016) வெளியிடப்படுகிறது.






Thursday, April 21, 2016

அரியலூர் மாவட்டம் - சுற்றுலா (சிறப்பு) தளங்கள்!

அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ளது.




Wednesday, March 23, 2016

’சிங்கப்பூரின் தந்தை’ திரு. லீ குவான் யூ - முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...! (23/03/2016)

’சிங்கப்பூரின் தந்தை’ திரு. லீ குவான் யூ அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...! (23/03/2016)

இயற்கை வளம் இல்லை, மனித வளம் இல்லை, ஏன், நல்ல தண்ணீர் வளம்கூட இல்லை – இதுதான் 1965-ல் சிங்கப்பூரின் நிலை. ஆனால், திரு லீயிடம் 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கனவும், தெளிவும், திட்டங்களும் இருந்தன. அதன் முழுமை பெற்ற வெற்றிகரமான வடிவம்தான் இன்றைய நவீன சிங்கப்பூர்.



Tuesday, March 1, 2016

செட்டித்திருக்கோணம் - சிவன் கோவில் வரவு செலவு கணக்கு அறிக்கை 31-01-2016 வரை

செட்டித்திருக்கோணம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடணுறை இரணேஸ்வரர் திருக்கோயில் சிவாலயம் புதுப்பித்தல் திருப்பணி (2015-2016) ஆண்டு கணக்கறிக்கை:

நமது கிராம சிவன் கோயில் புதுப்பித்தல் திருப்பணியின் முதலாமாண்டு (வரவு/செலவு) கணக்கு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். CTK குழும நண்பர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி தொடர்ந்த பயணத்தில், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி, உற்சாகத்துடன் நண்பர்கள் வழங்கி வரும் பேராதரவுடன் நமது CTK- குழுமம் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



Monday, February 29, 2016

நூலகம் திறப்பு விழா - வாழ்த்துகள் திரு எஸ். எஸ். சிவசங்கர் (குன்னம் சட்டமன்ற உறுப்பினர்)!

நமது பகுதி சேர்ந்த (பெரம்பலூர் மாவட்டம்) வேப்பூர் ஒன்றியம் கொளப்பாடி கிராமத்தில் செம்பருத்தி என்ற பள்ளி மாணவி ஒருவரின் கோரிக்கையை ஏற்று புதிதாக நூலகம் அமைய நிதியுதவி வழங்கி நூலகத்தை பள்ளி மாணவி செம்பருத்தியின் கரங்களாலயே திறந்து வைத்த குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் (MLA) அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். well done sir, Great Work உங்களின் இதுபோன்ற கல்வி பணிகள் மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துகள்! சகோதரி செம்பருத்திக்கு பாராட்டுகள், உனது எண்ணபடியே IPS ஆக வாழ்த்துகள்!

கொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

செம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது.

சிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன்.
*****************




Friday, January 15, 2016

இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்! - 2016

இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்...!
நல்வழி பிறந்து நல்வாழ்வு மலரட்டும்...!