Friday, January 15, 2016

இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்! - 2016

இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்...!
நல்வழி பிறந்து நல்வாழ்வு மலரட்டும்...!

நல்வாழ்வு பொங்க...
செல்வமும் வளமும் தங்க...
இயற்கை வேளாண்மை செழிக்க...
விளைநிலம் மகிழ்ச்சியில் திளைக்க...
வீடுதோறும் வண்ணங்கோலங்களுடன் பூவிட்டு...
புதுப்பானை பச்சரிசி வெல்லம் இட்டு...
பொங்கலோ பொங்கல் என்று நாம் முழங்கும் வேளை
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில்...
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்...!



குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும் 
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ இறை வணங்கி
வாழ்த்துகிறோம் !


தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் நிலைத்து, ஆரோக்கியமும் செல்வமும் பெருகி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

****************************************

நல்வாழ்த்துகளுடன்...!


CTK - குழும நண்பர்கள் மற்றும் மாணவர்கள்
(CTK Green Village Development Organization) 
செட்டித்திருக்கோணம்.


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment