Thursday, March 30, 2017

நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி?

தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர், நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலேயே இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிலப்பதிவேடு மின்னணு இணையவழி சேவை (e-services) மூலம் தங்களது நில உரிமை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

அதாவது நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளிநாடுகளில் பணியில் இருக்கலாம். நமக்கு சொந்தமான வீடு, நிலம், தோட்டம் ஆகியவை உங்கள் சொந்த ஊரில் இருக்கும். நீங்கள் வரும் சமயத்தில் தான் அதை நேரில் சென்று பார்க்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என பார்ப்பது பற்றிய தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது உங்களது நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், முதலிய விவரங்களை குறித்து கொண்டு அடுத்ததாக உங்கள் வசம் இருக்கும் உங்களது நிலத்தின் பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்து கொள்ளுங்கள். 



தற்போது நில உரிமை நகல் பார்வையிட இந்த சுட்டியை கிளிக் செய்து இணையத்தளத்திற்கு சென்று
நில உரிமை(பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிட என்ற சுட்டியின் மீது க்ளிக் செய்தால் கீழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்.


பின்னர் உங்களிடம் உள்ள தகவல்களை அதற்குரிய கட்டங்களில் சரியாக உள்ளீடு செய்து சமர்பித்தால் உங்களுடைய நிலத்தின் சிட்டா விவரங்கள் அடங்கிய பக்கம் (கீழே இருப்பது போல்) விண்டோ ஓபன் ஆகும்.

 

அவ்வளவுதான். அதில் உங்களது நில உரிமையின் பட்டா சிட்டா விவரங்கள், உங்களது நிலத்தின் உரிமையாளர் பெயர், உறவுமுறை மற்றும் உங்கள் நிலத்தின் பரப்பும் எவ்வளவு என்பதும் வரும் நில உரிமை சம்பந்தமான அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம். 

Credit: http://www.uzhavan.com

குறிப்பு: இந்த கட்டுரை எங்கள் பகுதியை அரியலூர் (வாரியங்காவல்) சேர்ந்த நண்பர் 'உழவன்' ராசா அவர்களால் அவரது வலைத்தளத்தில் எழுதப்பட்டது. இந்த பயனுள்ள தகவல்களை மேலும் பலர் தெரிந்து கொள்வதற்காக எங்கள் கிராம வலைத்தளத்திலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment