This is an example of a HTML caption with a link.

Monday, October 19, 2015

CTK Group - நண்பர்கள் குழுமம் சமூகநல அமைப்பு - செட்டித்திருக்கோணம்!

அணைவருக்கும் வணக்கம்,
CTK நண்பர்கள் குழும சமூகநல அமைப்பானது நமது கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் களப்பணியையும், சிங்கப்பூர் மற்றும் மற்ற அயல்நாடுகளில் பணியாற்றும் இளைஞர்களின் நிதியினையும் அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. (பண்டிகை காலங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதற்காகவும், திருவிழாக்காலங்களில் .’.ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமே தொடங்கப்பட்ட குழும அமைப்பு இதுவல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்)




Sunday, August 30, 2015

அரியலூர் மாவட்டம் - சீமை கருவேல மரம்

                                                              சீமை கருவேல மரம்

கருவேல மரம் இது எப்படி வந்தது எங்கிருந்து வந்ததுன்னு சொல்லி நேரத்த வீணாக்க விரும்பல. இது நம்மளையும், நம்முடைய நாட்டின் இயற்கை வளங்களையும் அழிப்பதற்காக சதிகாரர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த கருவேல மரம்.  

சீமைகருவேலமரம் நம்முடைய நீர்நிலைகளிலும் , தரிசுநிலத்தில் மட்டுமே முன்பு இருந்தது ,ஆனால் தற்போது நிலமைவேறு விளைநிலங்கள், வாய்க்கால்,வரப்புகள் என எல்லா இடங்களிலும் வளர ஆரம்பித்துவிட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மட்டும்மல்லாது விவசாயநிலங்களும் பாதிப்படைந்துள்ளது.
             
கருவேல மரத்தினால் ஏற்படும் விளைவுகள்:
நிலத்தடி நீர்மட்டத்தை வற்றசெய்கிறது.
மண்வளம் பாதிப்படைகிறது.
 பருவமழை குறைந்துள்ளது.
நிலத்தடிநீரை உப்புநீராக மாற்றுகிறது.
நீர்நிலைகளில் உள்ளநீர் விஷதன்மையாகியுள்ளது.
காற்றில் உள்ள ஈரபதத்தை உறிஞ்சுகிறது.
மனிதனுக்கு பல சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
ஆடு,மாடுகளுக்கு பற்பல நோய்களையும்,மலட்டுத்தன்மையையும் உண்டாக்குகிறது.
இது மற்ற மரங்களைபோல் இல்லாமல் தன்னுடைய வேரைகொண்டு 30 அடி நீள , அகலத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது.
இந்த மரம் முழுவதும் விஷதன்மை கொண்டது.இதன் விறகை எரிக்கும்போது வெளிவரும் புகையினால் 
மனிதனுக்கு புற்றுநோய்,நுரையிறல் பாதிப்பை உண்டாக்குகிறது.
இதன் அருகில் எந்த ஒரு தாவரங்களையும், மரங்களையும் செழிப்பாக வளரவிடாது காரணம் இதிலிருந்து வெளிவரும் வெப்பகாற்றுதான்.

மேலும் ஓர் உதாரணம்


நமது கிராமத்தில் உள்ள நமது பிள்ளைகள்,உறவினர்கள், நண்பர்கள் படிப்புக்காகவும், பணிக்காகவும் வெளி ஊர்களுக்கும், வெளிநாட்டிற்க்கும் சென்றுவருகிறார்கள், வரும் போது அவர்கள் முகம் மற்றும் அவர்களுடைய சருமம் முன்பு நமது கிராமத்தில் இருந்ததைவிட பளபளப்பாகவும்,அவர்கள் சருமத்தில் வறச்சியின்றி இருப்பதை காணமுடியும். இதற்கு முக்கிய காரணம் நகர்புறத்தில் அதிகமான  கருவேலமரம் இருப்பதில்லை. ஆகையால் நாமும் நமது கிராமபுறத்தில் உள்ள கருவேலமரத்தை அடியோடு அழிப்போம் என உறுதிமொழி எடுப்போம். நமது அடுத்த தலைமுறையினருக்கு இயற்கை வளத்தையும், மண்வளத்தையும் பாதுகாப்போம். 

கருவேல மரத்தை அழிப்போம் 
மற்ற மரங்களை வளர்ப்போம்
மழை பெறுவோம்
மண்வளம் காப்போம்.

மேலும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

அன்புடன்.



CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
(CTK Village of Social Work)
செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு
செட்டித்திருக்கோணம்



Saturday, August 22, 2015

அரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்!

அரியலூர் மாவட்டம்.
    அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளே. சிமெண்ட் தொழிற்சாலைகளின் ஆதிக்கத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. நமது மாவட்டத்தில் தான் ஆசியாவிலேயே சிமென்ட் தயாரிப்பதற்கான அதிகமான மூலக்கூறு படிமம் உள்ளது  அதனால் இங்கு  அதிகபடியான சிமெண்ட் ஆலைகள் உள்ளது அதனால் நாம் பெற்ற பயன் என்ன  சிமெண்ட் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் நமது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்படுகிறதா?

இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள்:

1) அரசு சிமெண்ட்
2) பிர்லா  சிமெண்ட்
3) ராம்கோ சிமெண்ட்
4) செட்டிநாடு சிமெண்ட்
5) டால்மியா சிமெண்ட்

இதற்கு முன்பு இங்கு இத்தனை சிமெண்ட் தொழிற்சாலைகள் இல்லை அதனால் போதுமான மழை பொய்தது ஆனால் தற்போது மற்ற மாவட்டத்தை விட மழையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குவது சிமெண்ட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியெரும் நச்சு புகைமூட்டமே காரணம்.

அரியலூரின் தெற்கு பகுதியில் தான் சிமெண்ட் தயாரிப்புக்கு தேவையான மூலக்கூறுகளான சுண்ணாம்புக்கல், கருமண், தாது பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களை சிமெண்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கிவிட்டார்கள்.

இதனால் இப்பகுதியில் விவசாய தொழிலும் நலிவுற்றது. மிஞ்சியுள்ள விளைநிலங்களுக்கும் போதுமான மழை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய இயலவில்லை. இதனால் மக்கள் பிழைப்பு தேடி வெளிநாட்டிற்க்கும் , வெளிமாநிலத்திற்கும், வெளிமாவட்டத்திற்க்கும் பிழைப்பு தேடி சென்ற வண்ணம் உள்ளனர்.

இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்களும் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதும் இல்லை . தங்கள் தொழிற்சாலைக்கு தேவையான ஆட்களை வெளி மாநிலத்திலிருந்து கொண்டு வருகிறார்கள். நம் பகுதியில் உள்ள இயற்கை தாது வளங்களை சிமெண்ட் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அழித்து வருகிறது.

பாதிப்புகள்:

சிமெண்ட்  தொழிற்சாலையிருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபடுகிறது, நீர்நிலைகளில் உள்ள நீர் மாசு அடைகிறது, விவசாய நிலங்களில் பயிர்களையும் பாதிக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாசநோய், தோல் நோய் போன்ற அறிகுறிகள் தற்போது தென்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தற்போது இப்பகுதியில் தோண்டப்படும் பெரிய பெரிய குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டமும் கீழே சென்றுவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் நம் பகுதியில் குடிநீர் பஞ்சமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சுற்று சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது. சிமெண்ட் ஆலைகள் இயக்கும் கனரக வாகனத்தில் அளவுக்கு அதிகமான எடைகளை ஏற்றி செல்வதால் இங்குள்ள சாலைகள் பாழைடைந்து விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.   

இதற்கு தீர்வுதான் என்ன? மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய போகிறது.

நம் பகுதி வளங்கள்  சுரண்டப்படுகிறது நம் எதிர்காலம் என்ன ஆவது? இன்னும் 50 வருடத்தில் இந்த வளங்கள் முடிந்ததும் ஆலைகள் வேறு இடம் நோக்கி போய்விடுவார்கள் பிறகு நம் பகுதி நரகம் போல் ஆகிவிடும் ஆலை நிர்வாகங்கள்  நமக்கு செய்த  நன்மை என்ன? அரசு செய்த நன்மை என்ன ? இதற்கு முடிவுதான் என்ன ? ஒரு வருடத்திலஆயிரக்கணக்கான கோடி  ரூபாய் மத்திய  மாநில அரசுகள் வரி வருவாய் பெருகின்றது. நமது மாவட்டத்திற்கும், நம் பகுதி மக்களுக்கும் செய்தது என்ன? 

நம் உரிமையை நிலைநாட்டுவது எப்படி? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ஒரு லட்சம் முதல் ஒன்னறை லட்சம் வரை மட்டுமே இருந்தது ஆனால் இன்று நிலமையோ வேறு ஒரு ஏக்கர் 12 முதல் 15 வரை உள்ளது. விவசாய நிலத்தை விற்றுவிட்டு வீடு கட்ட, கடனை அடைக்க முடியும் ஆனால் சாப்பாட்டுக்கு மாற்றாக என்ன செய்ய முடியும் ? இதற்கு முன்பு விற்றவர்கள்  என்ன செய்கிறார்கள் உங்களுக்கெ தெரியும்

நம் பகுதி மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம். முடிந்தளவு நம் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இனி எஞ்ஞியுள்ள விளைநிலங்களையாவது  தொழிற்சாலைகளுக்கு தாரைவார்க்காமல் இருப்போம். 

”மரம் வளர்ப்போம்...மழை பெறுவோம்...மண் வளம் காப்போம்”

மேலும் உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.

அன்புடன்.


CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்

(CTK Village of Social Work)

செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு

செட்டித்திருக்கோணம்




Wednesday, April 8, 2015

செட்டித்திருக்கோணம் - பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (வீடியோ தொகுப்பு)

நமது கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (20/3/15) நடைபெற இருக்கும் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு, CTK Group - நண்பர்கள் குழுமம் மற்றும் சிங்கை வாழ் நண்பர்கள் எங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி பள்ளி மற்றும் மாணவர்கள் கல்வி மேம்பாட்டில் பங்கெடுத்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிதியுதவி வழங்கி சிறப்பித்த  அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சிங்கை வாழ் நண்பர்கள் மற்றும் CTK Group- நண்பர்கள் குழுமத்தின் அன்பின் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துகொண்டு பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பினை எங்கள் கிராம இணையதளத்தில் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.




Saturday, March 21, 2015

செட்டித்திருக்கோணம் - சிவன் கோயில் (இரணேஸ்வரர் சிவாலயம்) புகைப்படத் தொகுப்புகள்!


நமது (செட்டித்திருக்கோணம்) கிராமத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரமாண்டு பழமை வாழ்ந்த இராசேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட அறம் வளர்த்த நாயகி உடனுறை இரணேஸ்வரர் சிவாலயம் திருக்கோவிலின் புகைப்படத் தொகுப்பு:-







Friday, March 20, 2015

செட்டித்திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - ஆண்டு விழா கொண்டாட்டம் 2015!

நமது கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (20/3/15) நடைபெற இருக்கும் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு சிங்கை வாழ் நண்பர்கள் எங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி பள்ளி மற்றும் மாணவர்கள் பயன்பாட்டில் பங்கெடுத்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிங்கை வாழ் நண்பர்களின் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.



Thursday, March 12, 2015

ஏரிகளைப் போற்றிய முன்னோர் - பாடம் சொல்லும் அரியலூர் வரலாறு!

கோடைக்கு முன்னரே அதன் வெம்மை தாக்குகிறது. பாசன பாதிப்பு மட்டுமல்ல, இனி குடிநீர் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நிலத்தடி நீர்வளத்தைக் காப்பதில் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்த நீர் மேலாண்மை நுணுக்கத்தை நாம் மறந்ததன் நிதர்சன உதாரணம், இன்றைய அரியலூர் மாவட்டம் எதிர்கொண்டிருக்கும் வறட்சி.



Tuesday, January 13, 2015

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகி, ஆரோக்கியமும் செல்வமும் பொங்கி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ CTK குழும நண்பர்களின் மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!