Friday, March 20, 2015

செட்டித்திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - ஆண்டு விழா கொண்டாட்டம் 2015!

நமது கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (20/3/15) நடைபெற இருக்கும் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு சிங்கை வாழ் நண்பர்கள் எங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி பள்ளி மற்றும் மாணவர்கள் பயன்பாட்டில் பங்கெடுத்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்து கொண்டிருக்கும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிங்கை வாழ் நண்பர்களின் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை' (குறள்-400)
(ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய  செல்வம் அல்ல.)

‘Education is the most powerful weapon which you can use to change the world’ (Nelson Mandela)


நமது கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கல்வி மேம்பாட்டிற்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்த சிங்கை வாழ் நண்பர்களுக்கு, CTK-நண்பர்கள் குழுமத்தின் இதயங்கனிந்த அன்பின் நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிதியுதவி வழங்கிய சிங்கை வாழ் நண்பர்களின் பெயர் பட்டியல்:

அன்புடன்,




CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
(CTK Village of Social Work)
செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு
செட்டித்திருக்கோணம்



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment