Tuesday, January 13, 2015

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இதயங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தைத்திரு நன்னாளிலே அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் பெருகி, ஆரோக்கியமும் செல்வமும் பொங்கி வாழ்வில் பல வெற்றிகள் பெற்று மனமகிழ்ச்சியுடன் நீடுழி வாழ CTK குழும நண்பர்களின் மனமார்ந்த இனிய பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

வற்றி வரண்டிருக்கும் தமிழர் வாழ்வினிலே
பற்றி நிற்கும் துயர் மறைந்து பாதைகள் துலங்கிடட்டும்
நெற்றி வியர்வையிலே வாழ்ந்திருக்கும் உழைப்பாளிகளும்
பற்றி நிற்கும் துயர் களைந்து பசுமைதனைக் கண்டிடட்டும்.



நல்வாழ்த்துகளுடன்.....! 
CTK GROUP ORGANIZATION 
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு
செட்டித்திருக்கோணம்.


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment