’சிங்கப்பூரின் தந்தை’ திரு. லீ குவான் யூ அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...! (23/03/2016)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி...! (23/03/2016)
இயற்கை வளம் இல்லை, மனித வளம் இல்லை, ஏன், நல்ல தண்ணீர் வளம்கூட இல்லை – இதுதான் 1965-ல் சிங்கப்பூரின் நிலை. ஆனால், திரு லீயிடம் 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கனவும், தெளிவும், திட்டங்களும் இருந்தன. அதன் முழுமை பெற்ற வெற்றிகரமான வடிவம்தான் இன்றைய நவீன சிங்கப்பூர்.
1965ஐ ஒட்டிய தொடக்க காலம், சவால்கள் நிறைந்ததாக இருந்ததைச் சொல்கிறது சரித்திரம். சீன, மலாய், இந்திய இனங்களுக்கிடையிலான சமத்துவம், இருமொழிக் கொள்கை, பிரிட்டிஷ் இராணுவம் வெளியேறிய பிறகு தனது பாதுகாப்பைத் தானே பார்த்துக் கொள்ளவேண்டிய சூழல், ஊழலற்ற நிர்வாகம், உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறத்தக்க நிலையை உருவாக்குவது இப்படி பல சவால்கள். இவற்றையெல்லாம், தம் தேசத்தை மேம்படுத்தும் வழிகளைக் காணும் வாய்ப்பாகப் பார்த்தவர் லீ. ‘எண்ணித் துணிக கருமம்’ என்பதற்கு இவரன்றி வேறு யாரும் சரியான உதாரணமாக இயலாது. ‘இதனை இதனால் இவன் முடிப்பான்’ என்றாயும் திறன் அவரிடம் இருந்தது. அதன் பலனை இன்றைய தலைமுறை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
அவரது பன்முகத்தன்மை கொண்ட தலைமைத்துவம் எப்போதும் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒன்று. பொருளாதார வளமிக்க நாடாக சிங்கப்பூரை மாற்றுவதுதான் முக்கிய இலக்கென்றாலும், மொழி, பண்பாடு, மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் அவர் காட்டிய அக்கறையின் ஒரு கூறுதான், தமிழும் சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கும் அழகு.
‘மரணப்படுக்கையில் இருந்தாலும், எங்காவது தவறு நடக்கிறதென்றால், எழுந்து வந்து, சரி செய்வேன்’ என்றவர் திரு லீ. எழுந்து வந்து சரி செய்யத்தக்கத் தவறுகள் நேராத ஒரு தேசமாக இன்று சிங்கப்பூர் உருவாகி இருப்பதே அவரது கனவுகள் சரியானவை என்பதற்குத் தக்க சாட்சி!
எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து சிங்கை தேசத்தை கட்டமைத்து உருவாக்கிய மாமனிதர். எத்தனையோ பேரின் விருப்பங்களை, கனவுகளை நனவாக்கி காட்டி பல அடிச்சுவடுகளை விட்டுச்சென்ற அந்த நல்மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
தேங்யூ லீ!! We are miss you Lee.
அன்று முதல் இன்று வரை என்றும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர்...
பிறந்த மண் பிரிந்து பிழைக்க பொருள் தேடி வந்தோம்..
எங்கள் வியர்வை பெற்று உயர்வை பரிசாக தந்தீர்கள்
துயர் வந்தபோதெல்லாம் உடன் வந்து மகிழ்வை தந்தீர்கள்
சிங்கை தேசத்தை கட்டமைத்த சிங்கப்பூரின் சிங்கம் நீங்கள்
தமிழகத்தில் பல குடும்பங்களின் ஏழ்மையை விரட்டிய
இளைஞர்கள் பலரின் கனவு வாழ்க்கையை நனவாக்கிய
சிங்கப்பூரின் தேசத்தின் தந்தையே....
தமிழ் மொழியை சிங்கப்பூரில்
ஆட்சி மொழியாக்கிய சிகரமே...
உங்கள் காலத்தில் வாழ்ந்ததும் பெருமை - இனி
உங்கள் நினைவோடு வாழ்வதும் பெருமை.
து. ராஜேந்திரன், வி. ராஜவேல், அ.முருகாணந்தம், த. இளையராஜன், வீ. வீரமணி, ரா. கண்ணதாசன் ரா. கதிரவன், வீ. சுப்ரமணியன், தே. வீரமொழி, கா. கனகராஜ், ரவி. சிலம்பரசன், ப. மணிகண்டன், த. ஆனந்த் ச. கருப்புசாமி, ஆ. கோவிந்தராஜ், ஆ. செளந்தரராஜன், து. ராஜா, க. மருதமுத்து, த. சுரேஷ், சி.சக்திமுருகன், த. பழனிசாமி, செ. பிரபாகரன்
நினைவுகளுடன்...!
CTK-நண்பர்கள் குழுமம்
சிங்கை வாழ் CTK நண்பர்கள்
செட்டித்திருக்கோணம்
அரியலூர் மாவட்டம்
www.chettithirukkonam.com
|
0 Responses So Far:
Post a Comment