Tuesday, July 26, 2016

திரு. APJ. அப்துல் கலாம் - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (15.10.1931 - 27.07.2015)

’எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்’ - குறள்

நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை
நீ எண்ணுவது 
விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்.
நீ நீயாக இரு! 
’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’
                                                             - டாக்டர். APJ. அப்துல் கலாம்

எம் தாய்ப்பறவை இவ்வுலக கூடு பிரிந்து
மெய்யுலகு எய்தியது.
எம் கனவுகளுக்கு அதிபதி இன்று
கடவுள்களின் வரிசையில்...
’விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் உறங்குவதில்லை’
உம் கனவுகளையும் சுமந்து கொண்டு
இன்னும் உயர உயர பறப்போம் நாம்.
சரித்திரமாக மாறிய இளைஞர்களின் கனவு நாயகனே...!
எங்கள் இலக்கை காட்டிய ஒளிசுடரே...
உன் விசை இல்லாவிட்டாலும் நம் இலக்கை இழக்கப் போவதில்லை
கனவு, தன்னம்பிக்கை, உழைப்பு என்ற ஏவுகனையால் இலக்கை அடைந்து காட்டுவோம்.
உங்கள் கனவு நிச்சயம் மெய்ப்படும்
நீங்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டுள்ளீர்கள்...
சரித்திரத்தில் முதல்முறையாக ஒரு விண்கலம் மண்ணுக்குள் ஏவப்பட்டது.

WE LIKED YOU A LOT!
WE LEARNT FROM YOU A LOT!
NOW WE MISS YOU A LOT!

நினைவுகளுடன்...
CTK-நண்பர்கள் குழுமம்
சிங்கை வாழ் CTK நண்பர்கள் மற்றும் மாணவர்கள்
செட்டித்திருக்கோணம் 
அரியலூர் மாவட்டம்


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment