Monday, August 20, 2012

செட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு

அனைவருக்கும் வணக்கம்,
செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.


தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் சோழவள நாட்டின் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் போற்றக்கூடிய திருவையாற்றின் வடக்கே அமைந்துள்ள கொள்ளிட நதியில் இணைந்த பின்னே பாயும் மருதையாற்றின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்த சோழபுரம் (எ) 'செட்டித்திருக்கோணம்' என்கிற எங்கள் அழகிய கிராமம். பெரியதிருக்கோணம் பஞ்சாயத்தை (ஊராட்சி ஒன்றியம்) சார்ந்த எங்கள் கிராமத்தில் சுமார் 500 வீடுகளுடன் 1500 பேர் மக்கள் தொகையுடன் வசிக்கும் எங்களுக்கு விவசாயம்தான் வாழ்வாதாரமாக இருந்தாலும் ஊரில் உள்ள பல இளைஞர்கள் வாழ்வியல் நெருக்கடிகளை தீர்த்துக்கொள்வதற்காக தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும், சொந்த உறவுகளையும் பிரிந்து பொருளாதாரத்தை தேடி பெருநகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் சென்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


வானம் பார்த்த பூமிதான் என்றாலும் விவசாயத்திற்கான போதுமான இயற்கை வளங்களுடன் கூடிய மண் வளமும், கிராமத்தின் தெற்கு பகுதியில் விவசாய நிலப்பரப்பிற்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் மருதையாற்றின் நீர் வளமும் கொண்ட எங்கள் பூமியில் நெல், வேர்க்கடலை, கரும்பு, கம்பு, கேழ்வரகு. சோளம், எள், உளுந்து, துவரை, ஆமணக்கு போன்ற உணவுப்பயிர் வகைகளும், தானியங்களும் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன. எங்கள் கிராமத்தின் பகுதிகளில் உள்ள நிலங்களில் சிமெண்ட் உற்பத்திக்குப் பயன்படும் சுண்ணாம்புக்கல் இருக்கும் காரணத்தினால் கிராமத்திற்கு அருகே உள்ள பகுதிகளில் (பிர்லா, செட்டிநாடு, அரசு) போன்ற சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகம்.


மாறி வரும் நாகரீக வாழ்க்கை முறைகளில் கிராமத்திற்கே உரிய சில நடைமுறைகளும், யதார்த்தங்களுடன் கூடிய சில இயல்புகளும் சற்றே பாதிக்கப்பட்டிருந்தாலும், சில கிராமிய பாரம்பரியங்களும், நிகழ்வுகளும்  என்றுமே நம் பிறந்த வளர்ந்த கிராமத்து மண்ணின் நினைவுகளை நம்மில் அசைபோட வைக்கும். எங்கள் கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், பிறந்த வளர்ந்த சொந்த மண்ணின் நிகழ்வுகளையும், நினைவுகளையும் பசுமை மாறாமல் பதிவு செய்துகொள்வதற்காக இந்த வலைத்தளத்தை மகிழ்ச்சியுடன் தொடங்குகிறோம். 

அன்புடன்...
கிராம நண்பர்கள்
செட்டித்திருக்கோணம்.


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


6 Responses So Far:

மாணவன் said...

வாழ்த்துகள்...

rajathirukkonam said...

வாழ்த்துக்கள் மச்சி

rajathirukkonam said...

nice every thing

ஜிஎஸ்ஆர் said...

வாழ்த்துகள் தம்பி, போட்டோ ரொம்ப அருமையா இருக்கு

Arul said...

Nice to see this Blogspot and looks everything fine with good snapshots..keep it up..

Murugan said...

Nice...

Post a Comment