அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
20/11/2013 - புதன் கிழமையன்று எங்களது கிராமத்தை சேர்ந்த நண்பர் இரா. இராஜாவுக்கு ப. கோமதி என்ற மங்கையோடு திருமணம் நடைபெற இருக்கிறது. இல்லற வாழ்வில் இணையும் மணமக்கள் நீடுழி வாழ உங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
அருகினில் இருந்து வாழ்த்திட...
ஆசைகள் கோடி இருந்தும்!
நேரில் வந்து கைகுலுக்கிட...
நெஞ்சில் ஆவல் இருந்தும்!
கடல் தாண்டி இருப்பதனால்
மணவிழாவை காண முடியாமல்
மடல் மூலம் வாழ்த்துகின்றோம்!
இருவரி குறலாய்
இனிமையாய் வாழ்ந்து
இரு கண்களாய் - இரு
மழலைகள் பெற்று
அமைதித் தென்றல் வீச
அன்புத் தேரினில் - எந்நாளும்
பவனி வர...
ஆத்மப்பூர்வமான திருமண நல்வாழ்த்துகள்....!
இப்படிக்கு
சிங்கை வாழ் நண்பர்கள் மற்றும்
கிராம நண்பர்கள்
செட்டிதிருக்கோணம்
|
0 Responses So Far:
Post a Comment