Thursday, January 11, 2018

CTK SIVAN TEMPLE STATEMENT OF ACCOUNT - JAN 2018

CTK SRI SIVAN TEMPLE STATEMENT OF ACCOUNT - JAN 2018
(Fund Donated From Singai Friends) 

Dear CTK Friends,
We would like to submit herewith our village sivan temple as per attached financial Statement of Accounts, for your kind information and reference:

*If you need  further information, please do not hesitate to contact me.

*Appreciate your kind assistance to our Temple donors/ benefactors/ volunteers to be part of the Sri Sivan Temple Community.

* Thanks for your kind understanding and cooperation.

FINANCIAL STATEMENT OF ACCOUNT - JAN 2018


குறிப்பு:
1) மேற்குறிப்பிட்டுள்ள கணக்கு அறிக்கையின் (SOA as per attached image file) நிதியுதவி தொகை முழுவதும் CTK நண்பர்கள் குழுமம் மூலமாக வசூல் செய்யப்பட்டு சிவாலய திருப்பணிக்கு அனுப்பபட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் CTK சிங்கை நண்பர்கள் வழங்கிய நிதியுதவி/ நன்கொடை கணக்கு அறிக்கை (Statement of Account) ஆலய மேலாண்மை குழு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது. 

2) கணக்கு அறிக்கை சம்பந்தமான மேலதிக விபரங்களை (Financial E-Statement) நமது கிராம இணையத்தளம் (www.chettithirukkonam.com) மற்றும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் (CTK Village) வழியாகவும் தெரிந்துகொள்ளலாம்.

3) மேலும் நமது கிராம சிவன் கோவில் திருப்பணி பணிகளுக்காக நன்கொடை/ நிதியுதவி, பொருளுதவி வழங்க விருப்பம் உள்ள CTK சிங்கை நண்பர்கள் கோவில் வங்கி கணக்கு மூலமாகவும் அல்லது ஆலய மேலாண்மை குழு நிர்வாகிகளிடம் நேரடியாகவும் வழங்கலாம். தங்களின் ஒத்துழைப்பிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி!

4) சிவாலய திருப்பணிக்காக நிதியுதவி/ நன்கொடை வழங்கி சிறப்பித்து, நமது கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள், அரபுநாடு வாழ் நண்பர்கள், சென்னை வாழ் நண்பர்கள், வெளியூர் நண்பர்கள் மற்றும் கோவில் திருப்பணிக்கான களப்பணியில் சிறப்பான முறையில் செயல்படும் ஆலய மேலாண்மை குழு நிர்வாகிகள், மற்றும் கிராம பொதுமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான அன்பின் நன்றிகளை தெரிவித்துகொள்வதில்  CTK- நண்பர்கள் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது.
Regards,
CTK-நண்பர்கள் சமூகநல அமைப்பு
செட்டித்திருக்கோணம் கிராமம்
அரியலூர் மாவட்டம்



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment