Saturday, May 6, 2023

CTK காமராஜபுரம் மாரியம்மன் கோவில் புதிய சகட வாகனம்

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து." (குறள்: 596)

CTK நண்பர்களுக்கு வணக்கம், நமது காமராஜபுரம் கிராம இளைஞர்கள் / முக்கியஸ்தர்கள் அவர்களின் கோவில் பயன்பாட்டிற்காக CTK வெளிநாடு வாழ் நண்பர்களிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று அவர்கள் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு. மாரியம்மன் ஆலய சுவாமிகள் திருவீதியுலா பயன்பாட்டிற்காக புதிய 'சகட' வாகனம் நமது கிராம வெளிநாடு வாழ் நண்பர்கள் நிதியுதவி பங்களிப்பில் 30 ஏப்ரல், 2023 அன்று ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

நிதியுதவி வழங்கி சிறப்பித்த அத்துணை நண்பர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய கிராம முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகாரர்களுக்கும் CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒருங்கிணைப்பு:
CTK-நண்பர்கள் சமூகநல அமைப்பு, செட்டித்திருக்கோணம்.






Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment