Friday, November 21, 2014

CTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்

மதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா என்ற அமைப்பில் உள்ளது.


எங்களது கிராம இணையதளம் (www.chettithirukkonam.com) CTK குழும நண்பர்களால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. நமது கிராம சம்பந்தமான அனைத்துவித  தகவல்களை பகிர்ந்து கொண்டு கிராமத்திற்கு பயனுள்ள வகையில்  செயல்படும் விதமாக இந்த இணையத்தளம் விளங்கும். நமது ஊர் பெயரில் குரூப்/குழுமம் ஆரம்பிக்கபட்டதின் நோக்கம், நாம் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு நம்மால் முடிந்த நற்செயல்கள், உதவிகள் செய்து கிராம வளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு உதவிட வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும்தான். தவிர நமது குரூப் மற்ற அரசியல், ரசிகர் மன்றம், சங்கங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள், ஆகியவைகளுக்கு இடம் கொடுக்காமல் முழுக்க, முழுக்க இது நமது கிராம சம்பந்தமான, பொது விசயம் சார்ந்த அனைத்து விதமான நல்ல விசயங்களுக்காக மட்டும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது அனைவரின் எண்ணமும், நோக்கமுமாகும்.

நமது கிராம பள்ளி கல்வி மேம்பாட்டில் எங்களது குழுமம்/ இணையத் தளம் பெரும் பங்களிக்கும் என நம்புகிறோம். நமது கிராம மக்கள் மட்டுமன்றி, கிராம வளர்ச்சி கல்வி மேம்பாட்டின் மூலம் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.


குழுமம்/ தளத்தில் அரசியல்வாதி, பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொண்டு உதவிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நமது கிராமத்தின் குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கிராமத்திற்கு உதவிகள் செய்திருப்பின் அந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.


CTK - நண்பர்கள் குழுமத்தின் முதன்மையான நோக்கங்கள்:

கல்வி ஊக்கத் தொகை, புத்தகங்கள், பரிசுகள், பதக்கங்கள், கணினி மற்றும் ஏனைய படிப்பு சம்பந்தமான உதவிகளை வழங்குவது

பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்குவதன் மூலம் மாணவர்களின் பயன்பாட்டுக்கும், மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது

கிராமப்புற மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்வதில் உதவுவது.

பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள  கல்வி சம்பந்தமான எழுத்துக்களை அச்சிடுதல், பதிப்பித்தல்.

பள்ளியின் வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது. 

கிராமத்தின் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் செயல்படுதல்.

கிராமத்தில் அமைந்திருக்கும் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாருதல், மழை நீர் சேமிப்பு, மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல், அவற்றுக்கு துணை நிற்பது மற்றும் நிதி உதவி வழங்குவது

மரம் நடுவது மற்றும் பேணுவது தொடர்பான செயல்களுக்கு உதவி செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

கிராமபுற மக்களுக்கு விவசாயம் குறித்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

*****************************

செட்டித்திருக்கோணம் கிராமம் சிறந்த இடமாக வாழ்வதற்கு வழி வகுப்போம்!

கடவுள் நமக்கு அளித்த அறிவாற்றலை நல்வழியில் பயன்படுத்துவோம். தரமான வாழ்க்கையை பின்பற்றி இயன்றவரை மற்றவர்களுக்கு உதவிடுவோம்.

"நாம் இந்த உலகில் காண தலைப்படும் மாற்றங்கள் நாமே தான்" - மகாத்மா காந்தி

தங்களின் நிறை/ குறைகளை குழுமத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி.

பணிவன்புடன்,
CTK GROUP - நண்பர்கள் குழுமம்
செட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு
செட்டித்திருக்கோணம்



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


1 Responses So Far:

rajathirukkonam said...

ok supper machi thank u

Post a Comment