Friday, May 20, 2016

அரியலூர் - செட்டித்திருக்கோணம் கிராம செயலி வெளியீடு | Chettithirukkonam Village Android App Launched By CTK Group | 20 May 2016

ஆண்ட்ராய்ட் (Android) திறன்பேசிகளுக்கான (Smart Phone) செட்டித்திருக்கோணம் கிராமத்தின் அதிகாரப்பூர்வ (Official) செயலி (Mobile App) வெளியீடு.

அனைவருக்கும் வணக்கம், நமது கிராமத்திற்கான (செட்டித்திருக்கோணம்) புதிய ஆண்ட்ராய்ட் செயலி CTK-குழும நண்பர்களால் இன்று (20.05.2016) வெளியிடப்படுகிறது.



ஆண்ட்ராய்ட் (Android) திறன்பேசிகளுக்கான (Smart Phone) செட்டித்திருக்கோணம் கிராமத்தின் அதிகாரப்பூர்வ செயலியை  (Mobile App) வெளியிடுவதில் CTK- நண்பர்கள் குழுமத்தின் இணையதள குழு (Technical Team) பெருமையடைகிறது. கூகுள் செயலியகத்தில் (Google Play store) “Chettithirukkonam” அல்லது “CTK Village" என்று தட்டச்சு செய்து தேடுவதன் மூலமாகவோ அல்லது கீழ்காணும் நேரடி இணைப்பின் மூலமோ இந்த செயலியை தரவிறக்கிக் கொள்ளலாம். நமது செட்டித்திருக்கோணம் கிராமம் குறித்த அனைத்து விதமான தகவல்கள், செய்திகளை அறிந்துகொள்ளவும், நிழற்படங்கள் (Photos),காணொளிகளைக் காணவும், கிராம நலன் சார்ந்த பயனுள்ள பதிவுகளை தெரிந்துகொள்ளவும் இந்த செயலி (App) பெரிதும் உதவும்.

CTK Village Android App தரவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு:

“எமது கல்வியும், தொழில்நுட்பமும் நமது கிராம மக்களுக்காக பயன்படுத்துவதில் CTK-நண்பர்கள் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது”

”பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, தயவுசெய்து தவறுகள்/ குறைகளை சுட்டிக்காட்டுங்கள், நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். சின்ன சின்ன பாராட்டுகளும், அங்கீகாரமும் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்!”

நமது கிராம இணையத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி மேம்படுத்துதல் தொடர்பான நண்பர்களின் கருத்துகள்/ ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றன.நன்றி!
மின்னஞ்சல்: chettithirukkonam@gmail.com

**********************************************
Dear all,

We are pleased to announce the launch of our village android app! for our chettithirukkonam village.



Regards,
CTK Group Friends Social Organization
(CTK Green Village Development Association)



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


2 Responses So Far:

Unknown said...

நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள்,அரியலூர் மாவட்ட செய்திகளையும்,முக்கிய நிகழ்வுகளையும்
பகிர்ந்தால் அறிந்துகெள்ள வசதியாக இருக்கும்

செட்டித்திருக்கோணம் said...

நன்றி நண்பரே, கண்டிப்பாக அரியலூர் மற்றும் சுற்றியுள்ள நம் பகுதிகளின் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்கிறோம்.

Post a Comment